சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை – மாதவரம்

421

மாதவரம் போலீஸ் நிலையம் அருகே போலீஸ் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் செம்பியம், மாதவரம், புழல், செங்குன்றம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் வசித்து வருகின்றனர்.

பெரம்பூர் செம்பியம் போக்குவரத்து போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூருக்கு சென்றுள்ளார்.

இன்று காலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து இருப்பதை கண்டு தண்டபாணி அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் பீரோவில் வைத்திருந்த 15 சவரன் நகைகள், 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரிந்தது.

இதுகுறித்து மாதவரம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of