கார் கண்ணாடியை உடைத்து நகை திருடும் டிப் டாப் ஆசாமிகள்

290

நாமக்கல் மாவட்டத்தில், கார் கண்ணாடியை உடைத்து, அதிலிருந்த 7 சவரன் நகையை டிப் டாப் ஆசாமிகள்  திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோயம்புத்தூரை சேர்ந்த தமிழ்ச்செல்வி அவரது மகன் சிவா மற்றும் மகள் ஷிவானி ஆகியோர் கோவையிலிருந்து நாமக்கல்லில் சேலம் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற விழா ஒன்றிற்கு தங்களுடைய காரில் வந்துள்ளனர். காரை ஓட்டலுக்கு அருகில் தமிழ்ச்செல்வி நிறுத்தி விட்டு, 7சவரன் தங்க நகைகளுடன் கைப்பையை காரினுள் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த டிப்டாப் திருடர்கள் இருவர் காரில் உள்ள கைப்பையை நோட்டமிட்டுள்ளனர். காரை சுற்றி வந்த ஒருவன் தன்னுடைய கையில் வந்திருந்த வில் போன்ற ஒன்றினால் காரின் கண்ணாடியை உடைத்துள்ளான். பின்பு வந்த மற்றொருவன் காரின் கண்ணாடியை முழுவதுமாக உடைத்து காரில் இருந்த கைப்பையை எடுத்துச்சென்றுள்ளான்.இந்த காட்சிகள் அருகிலுள்ள கடை ஒன்றின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of