திண்டுக்கல் சீனிவாசன் மகன் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

329

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மகன் வெங்கடேசன் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ4 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

சீனிவாசனின் 2-வது மகன் வெங்கடேசன், திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு மெண்டோசா காலனியில் வசித்து வருகிறார். விடுமுறைக்காக குடும்பத்துடன் வெங்கடேசன் வெளியூர் சென்றிருந்தார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ4 லட்சம் ரொக்கத்தை அந்த நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இன்று காலை வீட்டுக்கு வந்த வெங்கடேசன் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதையும் பணம், நகை கொள்ளை போனதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அமைச்சரின் மகன் வீட்டிலேயே கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of