திருமண மண்டபத்தில்  திருட்டு..! சிசிடிவியில் சிக்கிய சிறுவன்

375

மதுரையில் திருமண மண்டபத்தின் அறையில் இருந்த பணத்தை திருடிச் சென்ற சிறுவனை, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் பிடித்து பணத்தை மீட்டனர்.

மதுரை பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், திருமணம் மண்டபம் ஒன்றில் தனது மகளுக்கான சுபநிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அப்போது மண்டபத்தின் அறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை பிடித்து பணத்தை மீட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of