சொத்து தகராறில் சுத்தியலால் அண்ணனை தாக்கிய தம்பி..!

168

கருப்பத்தேவன்பட்டியைச் சேர்ந்த மாயாண்டித்தேவர் என்பவரின் மகன் போஸ். இவருக்கும் இவரின் சித்தப்பா மகன் குமாருக்கும் இடையே பூர்வீக சொத்துபிரச்சினை இருந்துள்ளன.

இந்நிலையில் போஸ் குமார் இருவரும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த குமார் அங்கிருந்த சுத்தியலை எடுத்து அண்ணன் போஸின் தலையில் தாக்கினார்.

இதில் போஸ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்த போஸை  மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தம்பி குமாரை போலீசார் கைது செய்தனர்.