நேருக்கு நேர் மோதிய பள்ளி பேருந்துகள் – 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

801

தேனியில் இரண்டு பள்ளி பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், கம்பத்தில் செயல்பட்டு வரும் இரண்டு தனியார் பள்ளிகளின் பேருந்துகள் கூடலூர், குமுளி, லோயர்கேம்ப் ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்தது.

அப்போது, இரண்டு பேருந்துகளும் எதிர்பாராத விதமாக கூடலூர் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், நல்வாய்ப்பாக இரண்டு பேருந்தில் இருந்த 60 மாணவர்களும் அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

காயமடைந்த மாணவர்களுக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி வாகனங்களை ஓட்டி வந்த ஓட்டுநர்களின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்களை அழைப்பதற்கான சென்ற 2 தனியார் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 60-கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
விபத்து தனியா பேருதுகள் இரண்டுமே தனது கட்டுப்பாட்டு இழந்து வேகமாகவும் அஜாக்கரதையும் ஓட்யதே விபத்துக்கு காரணம் என கூறுகின்றனர்.

Advertisement