‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடலுக்கு இசைஞானி இசையமைக்க வில்லையா?

1411

திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் நாசர் இயக்குநராக அறிமுகமான முதல் படம் ‘அவதாரம்’. நாடக கலைஞனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்தில் அமைந்திருந்த இந்தப் படம் விமர்சக ரீதியாக பேசப்பட்டது.venkat prabhuஇப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரேவதி, பார்வை தெரியாதவராக நடித்திருந்தார். இசைஞானி இளையராஜா இசை மற்றும் குரலில், படத்தில் இடம்பெற்ற ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடல் இன்றளவும் எவர்கிரீன் மெலடி பாடலாக பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பாடல் குறித்து இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜாவும், அவரது சகோதரர் கங்கை அமரன் மகன் வெங்கட் பிரபவும் டுவிட்டரில் பேசிக்கொண்ட உரையாடல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யம் கலந்த கேள்வியை எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக டுவிட்டரில், தவறாக நினைக்கவில்லையென்றால், நமது பெரிய அண்ணன் கார்த்திக் ராஜாதானே ‘அவதாரம்’ படத்தின் ‘தென்றல் வந்து’ பாடலுக்கு ஆர்கஸ்ட்ரா பணிகளை மேற்கொண்டார். இது கொஞ்சம் உறுதிபடுத்த முடியுமா என்று யுவனிடம் கேள்வி எழுப்பியுள்ளார் வெங்கட் பிரபு.

இதற்கு பதிலளித்த யுவன், உறுதியாக தெரியவில்லை. அப்பாவிடம்தான் கேட்கவேண்டும். ஆனால் அவர்தான் (அண்ணன்தான்) பன்னியிருந்தார்னு நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தப் பாடல் உருவான விதம் குறித்து நடிகர் நாசர், இசை வெளியீட்டு விழா ஒன்றில் விரிவாக எடுத்துரைத்திருந்தார். அதன் விடியோவும் மிகவும் வைரலானது.

இந்நிலையில், யுவன் – வெங்கட்பிரபுவின் இந்த உரையாடல் கோடான கோடி ரசிகர்களின் பேவரிட் பாடலாக விளங்கும் ‘தென்றல் வந்து’ பாடல் குறித்து புதிய எதிர்பார்ப்பையும், கேள்வியையும் எழுப்பியுள்ளது.