மீண்டும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் நடத்த வேண்டிய தேவை உள்ளது – பிபின் ராவத்

988

மீண்டும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் நடத்த வேண்டிய தேவை உள்ளதாக இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவ வீரர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் மாதம் எல்லையை கடந்து சென்று பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சர்ஜிக்கல் தாக்குதல் இந்த தாக்குதல் அழைக்கப்பட்டது.

எல்லைக் கட்டுப்பாடு கோட்டு பகுதியில் இருக்கும் பயங்கரவாத முகாம்கள் மீது மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது என்று தாம் நம்புவதாக இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானால் எல்லையில் சண்டை நிறுத்தத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதற்கு பிறகும், எல்லைக்கு அப்பால் இருந்து தீவிரவாதிகள் அதிகளவில் ஊடுருவி வருகின்றனர் என்றும் இதுபோல் எல்லையில் ஊடுருவல் தொடர்வதை அனுமதிக்க முடியாது எனவும் பிபின்ராவத் கூறியுள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் முயற்சியை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement