ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை – செங்கோட்டையன்

151

சென்னை எழும்பூர், மேயர் ராமகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கல்வியோடு சேர்த்து விளையாட்டிலும் மாணவர்களை ஊக்குவிக்க முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார்.

2013ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக புகார் வந்ததாகவும், இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், தேர்வுகளில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இனி வரும் காலங்களில் தவறு நடைபெற்றால், அதனை சரி செய்ய அரசு தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of