போதிய மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், மின் தடைக்கு வாய்ப்பு இல்லை – தங்கமணி

326

 

எண்ணூர் சதுப்பு நிலத்தில் நிலக்கரி சாம்பலை கொட்ட வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Image result for minister thangamani

நாமக்கல் மாவட்டத்தில் மின் விளக்கு வசதியை மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சர் விஜய்பாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சக் தங்கமணி, வல்லூர் அனல் மின் நிலைய விவகாரத்தில், நீதிமன்றத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றினால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றார்.

தமிழகத்தில் போதிய மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், மின் தடைக்கு வாய்ப்பு இல்லை எனவும் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of