நெடுஞ்சாலைத்துறையில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை – லஞ்ச ஒழிப்புத்துறை

1369

நெடுஞ்சாலைத்துறையில் முதலமைச்சர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் மீது இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, முறைகேடு எதுவும் நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது,

நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் விட்ட விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு குறித்து விசாரித்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை தினசரி விசாரணை அறிக்கையைசென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில் இரண்டு ஆட்சிகளிலும் இதுபோன்ற முறையில் தான் டெண்டர் விடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நெடுஞ்சாலைதுறை டெண்டர் தொடர்பாக முறைகேடு எதுவும் நடக்கவில்லை எனவும் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement