தெர்மாக்கோலில் வீடு கட்டிய புதுமை! யாரு செஞ்சாங்க தெரியுமா..?

1929

கூரை வீடு, ஓட்டு வீடு, செங்கலில் வீடு, கல்லில் வீடு, ஏன் அட்டையில் கூட வீடு கட்டி பார்த்திருக்கிறோம். ஆனால் தெர்மகோலில் வீடு கட்டி பார்த்திருக்கிறீர்களா… வாருங்கள் பார்க்கலாம் இந்த தொகுப்பில்….

நீங்கள் பார்க்கும் இந்த காட்சிகள் உண்மைதான்….. தெர்மகோலில் தான் இந்த வீடு கட்டப்படுகிறது. நம்பமுடியவில்லையா… என்ன.. தெர்ம கோலில் வீடா என்ற ஆச்சரியம் உங்கள் புருவங்களை உயரவைக்கிறதா… பூகம்பம், இடி, மழை காற்று இவற்றையெல்லாம் தாங்குமா என்ற கேள்விகலெல்லாம் எழாமல் இல்லை தானே, இதே ஆச்சரியத்துடன் தான் நாமும் இந்த வீட்டை அணுகிணோம். எப்படி இந்த வீடு கட்டப்பட்டது என்று தெரிந்து கொள்வதற்காக….

கால மாற்றத்தால் காரை வீடுகள் ஓட்டு வீடுகளாகவும், அடுத்ததாக அது கான்கிரீட் வீடுகளாக மாறியுள்ளன. தற்போது சிமெண்ட் விலை உயர்வு ,மணல் தட்டுப்பாடு, ஆட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணத்தாலும் கட்டுமான பணிகள் சுணக்கம் ஏற்பட்டு நடுத்தர மக்கள் வீடு கட்ட முடியாமல் இருந்த வந்த நிலையில் தற்போது பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தில் குறைந்த செலவில் மாவட்டத்திலே முதன் முறையாக ‘தெர்மா கோல் அட்டை மூலம் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவர் வீடியோ கடை நடத்தி வருகிறார். ஒருமுறை கோவை செல்ல நேர்ந்த போது அங்கு ராமர் சென்ற வீடு குளிர்ச்சியாக இருப்பதை பார்த்து வீட்டின் கட்டிட தன்மையை அறிய அந்த வீட்டு உரிமையாளரிடம் கேட்ட பொழுது ‘இந்த வீடு – தெர்மா கோல் அட்டை மூலம் கட்டப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து புதுமையை புகுத்துவதற்கு ராமருக்கு மனதில் தோன்றியது இந்த புதிய எண்ணம். எனவே தற்போது 500 ச.மீ.பரப்பில், தான் கட்டி வரும் வீட்டை தெர்மகோல் வீடாக மாற்றிவிட்டார்.

இந்த வீட்டில் இருக்கும் போது குளிர்ச்சி அறையில் இருப்பது போன்று சூழ்நிலை இருப்பதாகவும் வீடு நீடித்து உழைக்கும் என்றும் தெரிவித்தார்.
இது குறித்து இந்த வீட்டை கட்டி வரும் பொறியாளர் கூறும்போது, மற்ற கட்டிடங்களில் போல் இல்லாமல் சற்று வித்யாசமாக நடுவில் தெர்மா கோல் அட்டை – இரண்டு புறமும் வெல்டு மிஸ் வைத்து கட்டப்படுவதாகவும், இரண்டு புறமும் சிமெண்ட், சின்ன ஜல்லி, எம்சேன்ட் மணல் ஆகிய கலவைகளால் பூச்சு வேலையோடு நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் மற்ற கட்டிடங்களை விட இந்த வீடு எடை குறைவாக காணப்படுகிறது. ரிப்ட் ஸ்லேப் டெக்னாலஜி என்ற நவீன தொழில் நுட்பத்துடன் இந்த வீடு நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத அளவிற்கு, எல்லா வகை நிலப்பரப்பில் தெர்மா கோல் அட்டை மூலம் கட்டப்படும் வீடு நீடித்த தன்மை கொண்டதாக உள்ளது என தெரிவித்தார்.

தெர்மகோலை தண்ணீருக்காக பயன்படுத்தலாமா என்ற பிரச்சனை ஏற்பட்டு சர்ச்சை கிளப்பிய நிலையில் தெர்மகோலை வைத்து வீடே கட்டலாம் என்று நிரூபித்துள்ளார் இந்த வீட்டின் சொந்தக்காரர். திருச்சி, துறையூர் உள்ளிட்ட பல இடங்களிலும் இந்த புது வீட்டிற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

சத்தியம் செய்திகளுக்காக பெரம்பலூர் செய்தியாளர் மாரிமுத்துவுடன் செய்திக்குழு…..

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of