அவர்கள் குரலை உயர்த்தி பேசுவது வேடிக்கையாகவுள்ளது ? – பிரதமர் மோடி

149

மத்தியப்பிரதேசம் மாநிலம் சித்தி பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அம்மாநில முதல் மந்திரி கமல்நாத் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு காங்கிரஸ் கட்சியினர் தன்மீது குற்றம்சாட்டுவதாக தெரிவித்தார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்துணவு அளிக்கும் திட்டம் உள்பட மத்திய அரசின் பல்வேறு நலத்திடங்களுக்காக நாங்கள் அனுப்பும் பணத்தை எல்லாம் இங்குள்ள மாநில அரசு சுரண்டி, டெல்லி துக்ளக் சாலையில் உள்ள தங்கள் கட்சியின் தலைமைக்கு அனுப்பி விடுகிறது. இப்படி திருட்டுத்தனம் செய்பவர்கள் எல்லாம் எங்களுக்கு எதிராக குரலை உயர்த்தி பேசுவது வேடிக்கையாக உள்ளது.

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். என்மீது தவறிருப்பதாக தெரியவந்தால் என் வீட்டிலும் அவர்கள் சோதனை நடத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of