மனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் ! யார் அந்த ஏலியன்கள் ?

2495

சொல்லால், செயலால் விவரிக்க முடியாத விஷயங்களே அமனுஷியம் என்று பெயர் பெற்றது. அதை போலவே மனிதனால் பெயர் சுட்ட பெறாத, பெயர் சுட்ட முடியாத விஷயங்களே ஏலியன் (ALIEN) என்று அழைக்கப்படுகிறது. ஏலியன், சிறு வயது முதலே நம்மை ஆச்சர்யமூட்டும் ஒரு அமானுஷ்யம். பறக்கும் தட்டு, அதில் பயணிக்கும் அதிசய மனிதர்கள். பல நூறு ஆண்டுகள் ஆயினும் ஏலியன்கள் பற்றி நாம் அறிந்தவை இவை மட்டுமே.

முதன்முதலில் கி.பி 1440ம் ஆண்டு பண்டைய எகிப்தில் தோன்றியது முதல் பறக்கும் தட்டு. அன்று முதல் கடந்த வருடம் ஜூன் மாதம் 8ம் தேதி நியூயார்க் நகரில் தோன்றிய பறக்கும் தட்டு வரை பலஆயிரம் முறை இவை பூமியில் தோன்றி மறைந்துள்ளன. இந்தியாவில் முதல் முதலில் 1954ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் MANBHUM என்ற இடத்தில் தோன்றியது 12 அடி நீளமும் சாம்பல் நிறமும் கொண்ட அந்த பறக்கும் தட்டு. ஆனால் இது வரை அதிலிருந்து மனிதர்கள் கீழிறங்கி வந்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.

alien-2

ஆனால் அமெரிக்கா மாகாணத்தில் 1966ம் ஆண்டு ஒரு பெண்மணி தன்னை ஒரு ஏலியன் வந்து சந்தித்தாகவும் அந்த ஏலியன் தன்னை காந்தர்வ மனம் புரிந்து அதன் பின் உறவுகொண்டு தான் கர்ப்பமுற்று இருப்பதாகவும் கூறியுள்ளார். சில நாட்களில் அந்த பெண்ணும் மாயமாய் மறைந்துவிட்டதாகவும் அவரை பற்றிய தகவல் கிடைக்க பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

alien-and-women

ஏலியன் என்பது யார் ? இந்த பறக்கும் தட்டுகள் (UFO) (Unknown Flying Object) எங்கிருந்து வருகின்றன ?. 1930ம் ஆண்டு புளூட்டோ என்ற கிரகம் கண்டறியப்பட்டது. (2006ம் ஆண்டு புளூட்டோ “கிரகம்” என்னும் மதிப்பை இழந்துவிட்டதாக அறிஞர்கள் கூறியுள்ளனர்) அன்று முதல் சூரிய குடும்பத்தில் மொத்தம் 9 கிரகங்கள் என்றானது. இந்த ஏலியன் நாம் வசிக்கும் பூமிக்கு அருகில் உள்ள வீனஸ் (வெள்ளி) கிரகத்தில் இருந்தே வருவதாக ஆரம்ப காலத்தில் கூறப்பட்ட்டது. அனால் 1990ம் ஆண்டு MAGELLAN என்ற NASA விண்கலம் வெள்ளில் கிரகத்தை அதன் சுற்றுப்பாதையில் ஆராய்ந்து வெள்ளி கிரகத்தில் 98 விழுக்காடு எரிமலைகளும், நச்சு காற்றுகள் மட்டுமே உள்ளதாக கூறியது.

அதன் பிறகு நமக்கு அருகாமையில் உள்ள அடுத்த கிரகமான மார்ஸ் (புதன்) மேல் தங்கள் அறிவியல் கண்களை திருப்பினார் விஞ்ஞானிகள். அவர்கள் யூகித்தது போலவே ஓடும் ஆறுகள், பாலைவன மணலை போன்ற மணற்திட்டுகள் என்று பல விஷயங்கள் அங்கே புலப்பட்டது. பறக்கும் தட்டுகள் சில முறை அங்கு கடந்து சென்றதாகவும் சான்றுகள் உண்டு.

alien-1

சரி நம்மை போல மனிதர்கள் அங்கு வாழ்வதாகவே இருக்கட்டும். அவர்கள் ஏன் இங்கு வந்து செல்கின்றனர் ? கிட்டத்தட்ட 180 முதல் 300 நாள் பயண தூரத்தில் உள்ள பூமியை எப்படி வந்தடைகின்றனர் ? அவர்கள் பயணம் செய்யும் அந்த பறக்கும் தட்டுகள் 300 நாள் பயண தூரத்திற்கான எரிபொருள் கொண்டவையா ? என்ற பல கேள்விகள் எழுகின்றன. (பூமியில் இருந்து புதன் கிட்டத்தட்ட 3 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது, அது சுமார் 20 டிரில்லியன் km) இப்படி பல கேள்விகள் என்னை ஆட்கொண்ட பொது விடை கிடைத்தது ஒரு எகிப்திய எழுத்தாளரின் ஏலியன் பற்றிய கருத்துக்கள்.

அவர் தன் உரையில் ஏலியன் எனப்படும் வேற்று கிரக வாசிகள் பூமியில் மனித நாகரிகம் தோன்றும் காலம் தொட்டே இங்கு வந்து செல்வதாகவும், பூமியில் இன்றளவும் நிலைத்து நிற்கும் பல உலக அதிசயங்களையும் அற்புத கட்டமைப்புகளையும் அவர்களே கட்டியதாகவும் கூறுகிறார். எல்லாவற்றிக்கு மேலாக நாம் வணங்கும் சில கடவுள்கள் கூட ஏலியன் என்று அவர் கூறியதே ஆச்சர்யத்தின் உச்சம். நம்மால் நினைத்தும் பார்க்க முடியாத அறிவியல் உச்சத்தில் அவர்கள் இருப்பதாக அவர் குறிப்பிடும் போதும் ஏலியன்கள் தங்கள் பறக்கும் தட்டுகளை மின்னல் வெட்டும் பாதையில் செலுத்தியே வெகு தூரம் பயணிக்கும் ஆற்றல் பெயருகின்றனர் என்பதையும் தெரிவித்தார்.

alien-3

தற்காலத்தில் காணப்பட்ட பறக்கும் தட்டுகளும் கூட மின்னலின் பாதையில் பல முறை குறுக்கிட்டதாக சான்றுகள் உண்டு. மனித நாகரிகம் தொடங்கும் முன்னரே இவர்கள் தோன்றி உள்ளனர் என்றால், இவர்கள் தோன்றியது எப்போது? பூமியை போல பிற கிரகளுக்கும் இவர்கள் செல்கின்றனரா ? யார் இவர்கள் ? அந்த அறிஞர் கூறியது போல கடவுள்களே இவர்கள்தானா ? இவற்றில் எதற்கும் இன்றைய அறிவியல் அறிஞர்களிடம் துளி அளவும் பதில் இல்லை என்பதே நிதர்சனம். நாம் அன்றாடம் பார்த்து ரசிக்கும் அந்த அழகிய வான்வெளியில் பறந்து கிடைக்கும் பல ஆச்சர்யங்களில் இவையும் ஒன்று.

லியோ (இணையதள அணி)