வேண்டாம் என்று ஒதுக்கியவர்களே தற்போது அதை செயல்படுத்துகின்றனர்

460

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சாகுல் ஹமீதுக்கு ஆதரவு கேட்டு, அக் கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவின் ஆதரவோடு பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்கினோம். ஆனால் அவர் பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்பட்டதினால், பின்னர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினோம்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் பெயரை சொல்லி தற்போது ஆட்சி நடத்தி கொண்டிருப்பவர்கள், அவர் முன்பு எந்த திட்டங்களையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கினாரோ அதையெல்லாம் தற்போது செயல்படுத்துகின்றனர்.

இதனால் தமிழக உரிமை பறிபோவதோடு மோடியின் எடுபிடிகளாக பழனிசாமியும், பன்னீர் செல்வமும் இருக்கின்றனர் என்று அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of