நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள் | Amit Shah

507

இந்தியால் தான் நாட்டை ஒருங்கிணைக்க முடியும். இந்தியை வைத்துதான் வெளிநாடுகளில் இந்தியாவை அடையாளம் காண முடியும் என்று அண்மையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறியது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் அவரது கருத்துக்கு மிகுந்த எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், இந்தி விவகாரம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று விளக்கம் அளித்துள்ளார். அதில், எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.

நான் எப்போதும் சொல்வது போல இந்திய மொழிகளை வலிமைப்படுத்த வேண்டும். தனது தாய்மொழியில் படிக்கும் போதுதான் ஒரு குழந்தையால் நன்றாக படிக்க முடியும்.

தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றுதான் கூறினேன் என விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement