டெல்லியில் கடும் பனிமூட்டம். ரயில்கள் தாமதம்!

469

தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே அதிகாலை நேரங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது.இன்றும் அதே நிலை நீடித்தது. பனிப்படலமாக காட்சியளித்ததால் குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர்.

டெல்லிக்கு வரவேண்டிய 13 ரயில்களும் இன்று தாமதம் ஆகின. கடுமையான குளிரும் காணப்பட்டது. இதனால், சாலையோரம் வசிக்கும் மக்கள் இரவு தங்கும் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். கடும் பனிமூட்டத்தால், டெல்லியில் காற்றின் தரமும் பாதிக்கப்பட்டது.

Advertisement