“இது ராணுவ வீரரின் வீடா..” வீட்டிற்குள் நுழைந்த திருடன்..! பிறகு நடந்த சுவாரசிய சம்பவம்..!

373

கேரள மாநிலத்தில் திருடன் செய்த செயல் ஒன்று சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் திருவாங்குளம் பகுதியில் ராணுவ வீரர் ஒருவரின் வீடு அமைந்துள்ளது. இது ராணுவ வீரரின் வீடு என்று தெரியாமல், திருடன் ஒருவன் வீட்டிற்குள் நுழைந்தான்.

அதன்பிறகே அது ராணுவ வீரரின் வீடு என்பது அந்த திருடனுக்கு தெரியவந்தது. இதையடுத்து மன்னிப்பு வாசகம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டான்.

அவன் எழுதிய வாசகத்தில், இது ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் திருட உள்ளே நுழைந்து விட்டேன் என்று தெரிவித்திருந்தான்.

மேலும், பைபிளின் ஏழாவது கட்டளையை மீறிவிட்டேன் என்றும், ராணுவ அதிகாரி அவர்களே, என்னை மன்னித்து விடுங்கள் என்றும் அவன் அந்த வாசகத்தில் குறிப்பிட்டிருந்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து தப்பியோடிய திருடனை தேடி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of