“சிசிடிவி-க்கு தான் முதல் பொங்கலே..” கோவில் திருடர்கள் கைவரிசை..!

286

தஞ்சை மாவட்டம் கரந்தை தமிழ்ச்சங்கம் பின்புறம் அமைந்துள்ள கோவிலின் பின்பக்க சுவர் ஏறி குதித்த கொள்ளையர்கள் அங்கிருந்த 3 அடி உயரமுள்ள ஐம்பொன் சிலை உட்பட 9 வெண்கல சிலைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்.பி மகேஸ்வரன் தலைமையிலான காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் கோவிலில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றதும், தங்களை போலீசார் கண்டுபிடிக்காமல் இருக்க கோவில் முழுவதும் மிளகாய் பொடியை தூவிச் சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து அங்கிருந்த மிளகாய் பாக்கெட்டுகளை கைப்பற்றிய போலீசார், கொள்ளைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of