சிசிடிவி தலையை திருப்பிய சிக்ரெட் திருடன்..! ஆச்சரியத்தில் போலீஸ்..!

425

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே காந்திநகர் ஆலமரம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் தனக்குச் சொந்தமான பெயிண்ட் கடையில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.எப்படி பணம் பறிபோனது என்று அறியாத கிருஷ்ணன், தாமதிக்காமல் போலீஸாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை போலீஸார் முதற்கட்ட விசாரணையாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தனர்.

பெயிண்ட் கடையின் மேற்கூரை வழியே உள் நுழைந்த திருடன், சிசிடிவியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க மேலிருந்து குதித்தவுடன் சிசிடிவி கேமராவில் தான் அகப்படாதவாறு திருப்பி வைத்துவிட்டு கொள்ளையடித்து முடித்ததும், மீண்டும் சிசிடிவி கேமராவை பழைய மாதிரியே திருப்பி வைத்துவிட்டு சென்றுள்ள சம்பவத்தைக் கண்டு போலீஸார் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடனை போலீஸார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of