மூன்றாம் சுரங்க விரிவாக்க திட்டத்தை கைவிட முடியாது – எம்.சி சம்பத்

650

மூன்றாம் சுரங்க விரிவாக்க திட்டத்தை கைவிட முடியாது என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடலூரில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், NLC நில எடுப்பு விவகாரம், மாவட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என்றும் இது குறித்து NLC நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் அதன் பின்னர் ஒரு நல்ல சூழல் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் எம்.சி சம்பத், மூன்றாம் சுரங்க விரிவாக்கத்தை திட்டத்தை கைவிட வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அவர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of