பாராளுமன்றத் தாக்குதல் நடந்தது பாஜக ஆட்சியில்… – திருமா பரபரப்பு குற்றச்சாட்டு

598

ஆட்சிக்கு வருவதற்காக பாஜக என்ன வேண்டுமானாலும் செய்யும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த திருமாவளவன்,
பாஜக ஆட்சியில் தான் பாராளுமன்றத் தாக்குதல் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சியில் இப்படி பதற்றம் ஏதும் நிலவியதா? என கேள்வியெழுப்பிய அவர், பாஜக ஆட்சியில் மட்டும் தாக்குதல்கள் அதிகரிக்கிறது. பாஜக ஆட்சிக்கு வருவதற்காக எந்த செயலிலும் இறங்கும் என குற்றஞ்சாட்டினார்.