அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமா

224

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நடைபெற்ற மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 119-வது பிறந்தநாள் விழாவில், திருமாவளவன் கலந்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள், சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் என கூறினார்.

மேலும், டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வு முறைகேடுகளில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும், அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.

ரஜினிகாந்த் தலைமையில் பாமக இணைந்து ஆட்சி அமைக்கும் என தமிழருவி மணியன் காணும் கனவு பலிக்குமா என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம் என்று அவர் கூறினார். மேலும், வரும் 22-ம் தேதி, சி.ஏ.ஏ. என்.ஆர்.சி. என்.பி.ஆர் ஆகியவற்றை எதிர்த்து பேரணி நடத்தவுள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of