ப.சிதம்பரத்தை கைது செய்ததிற்கு காரணம் இது தான் – திருமாவளவன்

666

ஜி.எஸ்.டி வரியின் குறைகளை சுட்டிக் காட்டியதால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என, எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் பலன் இருக்க வேண்டுமென விரும்புவதாக கூறினார். மேலும், ஜி.எஸ்.டி வரியால் தொழிற்துறை பாதிக்கப்பட்டு வேலை இழப்பு உண்டாகிருப்பதாக குற்றம்சாட்டிய திருமாவளவன், ஜி.எஸ்.டி வரியின் குறைகளை சுட்டிக் காட்டியதால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

Advertisement