தோல்வி பயம் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்

577

தோல்வி பயம் காரணமாகவே தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இளைஞர் காங்கிரஸின் சக்தி திட்டம் அறிமுகப்படுத்தும் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், தமிழசை சௌந்தரராஜன் 100 ஆண்டுகள் வரை வாழ வேண்டும் என்றும், அதுவரை பா.ஜ.க.வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதை அவர் காண்கூட பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனிடையே சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் இளைஞர் அணி கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, அங்கு வந்த பர்வீனா என்ற பெண், தமிழக காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஆசண் மவுலானா ஹாரூன் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து கோஷங்களை எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் கட்சியினர் அந்த பெண்ணை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்

Advertisement