அரசு பேருந்திற்கு கேக் வெட்டி கொண்டாடிய ஊழியர்கள்..! – இது பணிமனை சுவாரஸ்யம்..!

268

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பணிமனைக்கு அரசு பேருந்துகள் வந்து இன்றோடு 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அந்த பேருந்துகளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் அறங்கேறியுள்ளது.

பாபநாசத்திலிருந்து குதிரைவெட்டி செல்லும் ஒரு பேருந்தும், கோதையாறிலிருந்து ஊத்து வழியாக திருநெல்வேலிக்கு செல்லும் ஒரு பேருந்தும், மாஞ்சோலையிலிருந்து திருநெல்வேலி செல்லும் ஒரு பேருந்தும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை என்ற ஊருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்த பேருந்துகளுக்கு இன்றுடன் 4 ஆண்டுகள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

அதில் ஒரு பேருந்திற்கு மாஞ்சோலை மலையரசி எனவும், மற்றொரு பேருந்திற்கு மாஞ்சோலை வனகுயில் எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of