“குறுக்க இருந்தத பாக்கல..” செல்போனில் மும்மரமாக பேச்சு.. பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்..

2714

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மிட்டாளம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தியின் மனைவி லட்சனா. இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் செல்போன் பேசிக்கொண்டு சென்றுள்ளார்.

மும்மரமாக பேசி வந்த நிலையில், அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்திருக்கிறார். சத்தம் கேட்டு பதறி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், அதற்குள் லட்சனா பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், லட்சனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.