பாஜகவினர் பேரணி – பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு கேட்டு மனு

426

திருப்பூரில் தேசிய குடியுரிமை திட்டத்திற்கு ஆதரவாக, பாஜக சார்பில் நாளை பேரணி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பிரியாணி சங்கத்தினர் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், வரும் 28 ஆம் தேதி பெரியக்கடை வீதி வழியாக பாஜகவினர் பேரணி செல்ல உள்ளனர். அதனால் எங்களது பிரியாணி கடைக்கும் பிரியாணி அண்டாவிற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்து முன்னணி பொறுப்பாளரின் இறுதி ஊர்வலத்தில் அண்டா திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து, இஸ்லாமியர்கள் பகுதியில் நடைபெறும் பேரணி என்பதால் அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of