செம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..!

269

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே மதுகுடித்து இருசக்கரவாகனம் ஒட்டி வந்த போலீஸ்காரர் ஒருவர், மூதாட்டி மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றார். அப்போது சாலையில் தடுக்கி விழுந்து பொதுமக்களிடம் சிக்கினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் மயில்சாமி. இவர் நேற்று மாலை குடித்துவிட்டு, சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார்.

அப்போது, சூளை பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த மூதாட்டி மீது மோதிவிட்டு, மயில்சாமி நிற்காமல் போனதாக தெரிகிறது.

அதைப்பார்த்த, இளைஞர்கள் சிலர் மயில்சாமியை துரத்திக் கொண்டு சென்றனர், வழியில் இருந்த வேகத்தடையில் தடுக்கி மயில்சாமி விழுந்தார். அவரைப் பிடித்த மக்கள் சரமாரியாகத் திட்டினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.