பணத்தின் மீதான ஆசை..! தாய்க்கு மகன் செய்த கொடூரம்..!

578

திருப்பூர் மாவட்டம் காசிபாளையம் அருகே உள்ள மணியக்காரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்யமேரி. கணவர் உயிரிழந்த நிலையில், ஆரோக்யமேரி பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஹர்சித் என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

முதல் மகளுக்கு திருமணமாகியுள்ள நிலையில், இரண்டாவது மகள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மகன் ஹர்சித்துக்கு மனநிலை சரியில்லாததால், அவனை தன்னுடன் வளர்த்து வந்துள்ளார் ஆரோக்யமேரி. இந்நிலையில் வீட்டில் இருந்த ஆரோக்யமேரியின் அலறல் சத்தம் கேட்டது.

இதனையடுத்து அருகில் இருந்தவர் ஆரோக்யமேரியின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் அவர் மிதந்துக்கொண்டிருந்தார். அருகில் ஹர்சித் அழுதுக்கொண்டிருந்தார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஹர்சித்தை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது தாயிடம் பணம் கேட்டதாகவும், அதற்கு தாய் மறுத்ததாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் தாயை மகன் கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of