அடடே.. பரவாயில்லையே.. திருப்பூரில் இவ்வளவு பேர் ஓட்டு போட்டாங்களா…!

597

திருப்பூர் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட ஓட்டுப்பதிவில், 1,70,635 ஆண்கள், 1,70,815 பெண்கள், ஆறு திருநங்கைகள் என, 3,41,456 பேர் ஓட்டளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், ஏழு ஒன்றியங்களுக்கு, முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது.

தேர்தல் நடந்த ஒன்றியங்களில், இரண்டு லட்சத்து, 28 ஆயிரத்து, 412 ஆண்கள்; இரண்டு லட்சத்து, 33 ஆயிரத்து, 955 பெண்கள்; 33 திருநங்கைகள் என, நான்கு லட்சத்து, 62 ஆயிரத்து, 400 வாக்காளர் உள்ளனர். அவர்களில், 73. 84 சதவீதம் பேர் நேற்று ஓட்டளித்துள்ளனர்.

பல்லடம் மற்றும் ஊத்துக்குளி ஒன்றியத்தில், சில ஓட்டுச்சாவடிகளில், மாலை, 5:00 மணிக்கு பிறகும், வாக்காளர் காத்திருந்து ஓட்டளித்தனர். இதனால், இரவு, 8:30 மணி வரை, முதல்கட்ட தேர்தலின் ஓட்டுப்பதிவை கண்டறிய முடியாமல், அதிகாரிகள் திணறினர். இரவு, 9:00 மணிக்கு, 73.84 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளதாக அறிவித்துள்ளது.

திருப்பூர் ஒன்றியம், ஆண்கள், 27,809; பெண்கள்- 26,922; திருநங்கையர் – 1; மொத்தம் – 54,732. ஊத்துக்குளி, ஆண்கள் – 27, 675; பெண்கள், 27,621; மொத்தம் – 55, 296.காங்கயம், ஆண்கள் – 20,851; பெண்கள் – 20,848; திருநங்கையர் – 2; மொத்தம் – 41,701. பல்லடம், ஆண்கள் – 38,680; பெண்கள் – 39,067; மொத்தம், – 77,747.

வெள்ளகோவில், ஆண்கள் – 16,625; பெண்கள் -17,192; திருநங்கையர் -3; மொத்தம் – 33,820.மூலனுார், ஆண்கள்- 15,148; பெண்கள் – 15,672; மொத்தம் – 30,820. தாராபுரம், ஆண்கள் – 23,747, பெண்கள் – 23,593; மொத்தம் – 47,340.முதல்கட்ட தேர்தல் நடந்த ஏழு ஒன்றியங்களில் மொத்தம், 1,70,635 ஆண்கள்; 1,70,815 பெண்கள்; ஆறு திருநங்கைகள் என, 3,41,456 வாக்காளர் ஓட்டளித்துள்ளனர்.

இது, மொத்த வாக்காளரில், 73.84 சதவீதம் என, மாவட்ட தேர்தல் அலுவலர் விஜய கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.நேற்றைய முதல் கட்ட ஓட்டுப்பதிவில், பல்லடம் ஒன்றியத்தில் அதிகளவாக, 77,747 பேரும், குறைந்தளவாக, மூலனுார் ஒன்றியத்தில், 30,820 பேரும் ஓட்டளித்தனர்.

Advertisement