சிக்கன் பக்கோடா கேட்ட சிறுமி! கொடூரனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

597

திருவள்ளூர் அருகே தொழிற்சாலையில் 4 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், சிக்கன் பக்கோடா கேட்டதால் சிறுமியை கொலை செய்ததாக சிறுமியை கொன்றவ வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.

வெள்ளவேடு அடுத்த மதுரா குத்தம்பாக்கம் பகுதியில் காணாமல் போன ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அமீது என்பவரின் 4 வயது மகள் 15 ஆம் தேதி காலை தொழிற்சாலையின் பின்புறம் உள்ள முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் அமீதின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் நிலக்கர் என்ற வாலிபர் சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசாரிடம் நிலக்கர் அளித்த வாக்குமூலத்தில், வழக்கம் போல் சிறுமியை அழைத்துக் கொண்டு போன நிலக்கர், அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்ததாகவும், பின்னர் சிக்கன் பக்கோடா வாங்கிக்கொண்டு சிறுமியை சேம்பருக்கு அழைத்து சென்றதாகவும் கூறினான்.

அப்போது சிக்கன் பக்கோடா வேண்டும் என்று சிறுமி கேட்கவே அதற்கு மறுத்ததால் சிறுமி தனது கையை கடித்ததாக கூறினான். இதனால் ஆத்திரமடைந்த நிலக்கர் சிறுமியின் கண்ணத்தில் ஓங்கி அடித்ததில் எதிர்பாராத விதமாக பாலத்தின் சுவரில் இருந்து கீழே விழுந்து இறந்ததால், பயத்தில் சிறுமியின் உடலை தொழிற்சாலையின் பின்புறம் உள்ள புதரில் வீசியதாக போலீசாரிடம் தெரிவித்தான்.

இதையடுத்து நிலக்கரை கைது செய்த போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிக்கன் பக்கோடாவிற்காக சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.