“பக்கத்து வீட்டு நாயுடன் தகாத உறவு..!” விலங்குகள் நல ஆணையத்தின் உறுப்பினரின் பதிவால் பரபரப்பு!

925

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சாக்கா மார்க்கெட் பகுதியில் ஒரு நாய் கழுத்தில் ஒரு கடிதத்துடன் நின்றுக்கொண்டிருந்தது. அந்த நாய் குட்டியை விலங்குகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஒருவர் மீட்டெடுத்தார்.

பின்னர் அந்த நாயின் கழுத்தில் இருந்து கடிதத்தை எடுத்து படித்து பார்த்தார். அதில்,

“இது மிகவும் நல்ல நாயாகும். நல்ல பழக்க வழக்கங்களை கொண்டுள்ளது. பால், பிஸ்கெட், பச்சை முட்டை ஆகியவற்றை மட்டுமே உட்கொள்ளும்.

இத்தகைய நாய் எங்கள் பக்கத்து வீட்டு நாயுடன் தகாத உறவு வைத்திருந்ததை கண்டுபிடித்தோம்.

இதனால் இனி இந்த நாய் எங்களுக்கு தேவையில்லை. அதனால் இதை துரத்திவிடுகிறோம்”

என அந்த கடிதத்தில் எழுதியிருந்தது.

இதுகுறித்து விலங்கு உரிமை ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் ஸ்ரீ-தேவி பதிவிட்டுள்ளார்.

அதில், “என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏதோ குழந்தை போல் கடிதம் எழுதியுள்ளது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

Sreedevi S Kartha यांनी वर पोस्ट केले रविवार, २१ जुलै, २०१९

நாம் எப்படி குழந்தை பெற்றுக் கொள்கிறோமே அது போல்தான் நாய்களுக்கிடையேயான உறவு என்பதை போல் கருத வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாயை பெற விரும்பினால், கீழே உள்ள எனது எண்ணிற்கு கால் செய்யவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்செய்தி வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of