கொத்தடிமைகள் மீட்கப்பட்ட வழக்கு – கல்குவாரி உரிமையாளருக்கு சிறை

791

கொத்தடிமைகளை வைத்து வேலை வாங்கிய கல்குவாரி உரிமையாளர் 3 பேருக்கு11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 4 ஆயிரம் ரூபாய் ஆபராதம் விதித்து திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்யாறு தாலுகாவிற்கு உட்பட்ட சின்ன ஏழாச்சேரி கிராமத்தில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 31 பேர் ஒரு நாளைக்கு 17 முதல் 25 ரூபாய் வரை தினக்கூலியாக வழங்கி கொத்தடிமைகளாக நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2012 ஆண்டு தாசில்தார் விசுவநாதன் தலைமையில் கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்டதில். மொத்தம் 31 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்தது தெரியவந்தது.

இது குறித்து குவாரி உரிமையாளர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபால் கண்ணப்பன், சுதாகர், ஆகிய 3 பேருக்கும் மாவட்ட நீதிபதி மகிழேந்தி 11ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 4 ஆயிரம் ரூபாய அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Advertisement