இடைத்தேர்தல் நடத்த வேண்டாம்! நீதிபதிகள் கருத்து! திருவாரூர் தொகுதியின் நிலை????

81
madurai-high-court

முன்னாள் முதலமைச்சர் மு.க.கருணாநிதி 2018-ஆம் ஆண்டு வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். இவர் உயிரிழந்ததையடுத்து அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இல்லாததால், அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், திருவாரூர் இடைத்தேர்தலை நடத்துவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இடைத்தேர்தல் நடத்துவதற்கு பதிலாக, அந்த தொகுதியில் இறந்த நபரின் கட்சியை சேர்ந்தவரை எம்.எல்.ஏ-வாக நியமிக்கலாமே என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், இடைத்தேர்தல் நடத்தமால் எம்.எல்.ஏ தேர்வு செய்யப்படுவதால் மக்களின் வரிப்பணம் வீணாகுவது தடுக்கப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.