திருவாரூர் இடைத்தேர்தல் : அமமுக சார்பில் எஸ். காமராஜ் வேட்பாளராக அறிவிப்பு

617

திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையடுத்து, காலியாக இருக்கும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 31-ஆம் தேதி அறிவித்தது.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் அறிவித்தார். 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of