திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

927

திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு  வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை தேர்தலை தள்ளி வைக்க அதிமுக, திமுக, கம்யூ. கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை திமுக, நாம் தமிழர் கட்சியனர் அறிவித்தனர். விரைவில் அதிமுக கட்சியினரும் அறிவிப்பர் என எதிர்பார்க்கப்பட்டது.

கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of