திருவாரூர் தொகுதிக்கான வேட்பாளர் யார் என்று இன்று மாலை அறிவிக்கப்படும் என்று  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த டி.டி.வி தினகரன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது திருவாரூர் இடைத்தேர்தல் மற்றும் தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து சசிகலாவுடன் ஆலோசனை செய்ததாக கூறினார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசியதாக தெரிவித்தார். திருவாரூர் தொகுதிக்கான அ.ம.மு.க வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படுவார் என்றார். திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்றும் தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.