குடிபோதையில் தாயிடம் சண்டை.. 6 மாதங்களாக தந்தையிடம் பேசாமல் இருந்த 12 வயது சிறுமியின் நெகிழவைக்கும் செயல்..!

623

தந்தையை திருத்துவதற்காக தந்தைக்கு வித்தியாசமான கட்டளை விதித்த சிறுமியின் செயல் பலரையும் நெகிழவைத்துள்ளது. 

திருவாரூர் மாவட்டம் மருதாணம் பகுதியை சேர்ந்தவர் பூக்கட்டும் தொழிலாளி சிவக்குமார். இவருக்கு 7- ஆம் வகுப்பு படிக்கும் நதியா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

சிவக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்துபோன சிறுமி நதியா, தனது தந்தையுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். கடந்த 6 மாதங்களாக தந்தையுடன் பேசாமல் வைராக்கியத்தோடு இருந்துள்ளார் நதியா.

மகளிடம் பேசுவதற்கு பலமுறை முயற்சி செய்த சிவக்குமாருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. ஒரு கட்டத்திற்குமேல் இந்த வலியை தாங்க முடியாத தந்தை சிவக்குமார், தனது மகளிடம், நீ என்னிடம் பேசவேண்டுமென்றால் நான் என்ன செய்யவேண்டும்? என கேட்டுள்ளார். 

அதற்கு அந்த சிறுமி நதியா, தான் பயிலும் பள்ளிக்கு பின்னால் இருக்கும் குளம் துர்நாற்றம் வீசுவதாகவும், அதை சுத்தம் செய்து தந்தால் பேசுவேன் எனவும் தெரிவித்தார். 

இதனால் மகளின் கட்டளையை ஏற்ற தந்தை, அந்த குளத்தை காலையிலிருந்து உணவேதும் சாப்பிடாமல் சுத்தம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமி நதியா தந்தையிடம் பேசினார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த சிறுமியின் தந்தை சிவக்குமார் மகிழ்ச்சியில் தழைத்தார். அதுமட்டுமல்லாமல் தனது குடிப்பழக்கத்தையும் விடுவதாக தந்தையிடம் உறுதியளித்தார்.

சிறுவயதிலேயே சமூக அக்கறையும், தந்தையை திருத்த வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருந்த நதியாவின் இந்த செயலை கண்டு சிறுமியின் ஆசிரியை நெகிழ்ச்சியடைந்தார்.

இன்றைய நவீன காலக்கட்டத்தில் குழந்தைகள் வேறு திசையை நோக்கி செல்லும் சூழலில் சிறுமி நதியாவின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Lalludom Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Lalludom
Guest
Lalludom

இது போன்ற குழந்தைகள் கடவுளுக்கு சமம்.