சுய ஊரடங்கு உத்தரவு : வெறிச்சோடிய திருவாரூர்..!

311

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து திருவாரூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
பேருந்துகள், ரயில் முற்றிலும் இயங்கவில்லை. பொதுமக்கள் இன்றி திருவாரூர் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் மக்கள் வீடுகளிலேயே தங்கி இருக்கின்றனர்.

பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடை வீதிகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடின. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பேருந்துகள் ரயில் முற்றிலும் இயங்காத நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் சொற்ப அளவிலேயே உள்ளது.

கடைவீதி உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மக்கள் இன்றி திருவாரூர் வெறிச்சோடி காணப்படுகிறது. சுய ஊரடங்கு மட்டுமல்லாமல் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of