திருவாரூரில் பயங்கரம் – வெடி விபத்தில் 6 பேர் உடல் சிதறி பலி

575

திருவாரூர்: மன்னார்குடியில் பட்டாசு கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை நகரில் சிங்காரவேலன் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் நாட்டுவெடி தயாரித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

இதில், அங்கு பணியாற்றி கொண்டிருந்த சுரேஷ், பாபு, சிங்காரவேலு, மோகன், அறிவு, வீரய்யன் ஆகியோர் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

உடல் சிதறி பலியான தொழிலாளர்களின் பிரேதங்களை கைப்பற்றிய காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.