“இது இலங்கை தாதாவோட மூக்கு கிடையாது” – விசாரணையில் திடுக்

315

கழுகு-பூனைகள் மூலம் போதைப்பொருள் கடத்துவதில் நிபுணனான இலங்கை நிழல்உலக தாதா அங்கொட லொக்கா, கோவையில் மர்மமானமுறையில்  மரணமடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவையில் லொக்காவுடன் தொடர்புடையவர்களிடமும், மதுரையில் லொக்கா கூட்டாளிகளிடமும் சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்திருக்கிறது. மத்திய உளவுஅமைப்பான ” ரிசர்ச் அனலிசிஸ் விங்க்”என்றழைக்கப்படும் ரா- அதிகாரிகளும் கோவையில் லொக்கா மரணம் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், முகத்தோற்றத்தை மாற்றுவதற்காக அங்கொட லொக்கா மூக்கு அறுவை சிகிச்சையை கோவை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆள்மாறாட்ட நடவடிக்கையிலும் அங்கொட லொக்கா ஈடுபட்டிருப்பது விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  இதனிடையே, மதுரையில் லொக்காவுக்கு உதவிய வழக்கறிஞர் சிவகாமசுந்தரியின் உறவினர்களின் இல்லங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.