இதுவே இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக்

595

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆற்காடு மற்றும் வாலாஜாபேட்டையில் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர் அதிமுக ஆட்சியில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்போடு இருப்பதாக கூறினார்.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்சென்னை தொகுதி தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், ராமதாஸின் கருத்து இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக் என்று விமர்சித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “அ.தி.மு.க கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவருகிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்ந்து 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்திருக்கிறது. ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையுடன்தான் அந்த விவகாரம் இவ்வளவு காலம் வெளியில் தெரியாமல் இருந்திருக்கிறது. இந்த சூழலில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக அவர் சொல்லுவது உண்மையிலேயே மிக வருத்தமாகவும் நகைச்சுவைக்குரிய விஷயமாகவும்தான் இருக்கிறது என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of