சீன செயலிகளுக்கு தடை விதித்தது டிஜிட்டல் தாக்குதல் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

387

சீன செயலிகளுக்கு தடை விதித்தது டிஜிட்டல் தாக்குதல் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர் இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசு தடை எதிரொலியாக செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கை சீனாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில், சீன செயலிகளுக்கு  விதிக்கப்பட்ட தடை டிஜிட்டல் தாக்குதல் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டு மக்களின் தரவுகளை பாதுகாக்கவே சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்தார்.

Advertisement