இது தான் பேருந்து கட்டண அதிகரிப்புக்கு காரணம்! எம்.ஆர். விஜயபாஸ்கர் ஓபன் டாக்!

448

குறைந்த மக்கள் தொகை உள்ள பகுதிகளுக்கும், தங்குதடையின்றி, பேருந்துகள் இயக்கப்படுவதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், போக்குவரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க உறுப்பினர் ராஜேந்திரன், பேருந்து கட்டணம் இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பல வழித்தடங்களில், பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பேருந்து கட்டண அதிகரிப்புக்கு, டீசல் கட்டணம், ஊழியர்கள் ஊதிய உயர்வு போன்ற பல காரணங்கள் உள்ளதாக தெரிவித்தார். மக்கள் பயன்பாடே இல்லாத வழித்தடங்களில் மட்டுமே ஓரிரு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of