தூத்துக்குடியில் நான் போட்டியிட இது தான் காரணம்.., கனிமொழி

722

ஐந்தாண்டுகளுக்கு முன்னால், பிரதம மந்திரியின் கிராமங்கள் தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் உள்ள வெங்கடேசபுரம் கிராமத்தைத் தத்தெடுத்தேன்.
என்னுடைய எம்.பி. நிதியிலிருந்து பல்வேறு திட்டங்களுக்கும் நிதியளித்து உள்ளேன்.

அதன் காரணமாக, தூத்துக்குடிக்கு அவ்வப்போது வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். இங்கு கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதனால், தூத்துக்குடியில் உள்ள சூழ்நிலைகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தத் தொகுதியில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதனை அதிமுக அரசு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. தொழிற்சாலைகள் இல்லை.

வேலை வாய்ப்புகள் இல்லை. இதையெல்லாம் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அதனால், தூத்துக்குடி பகுதியில் என்னுடைய முயற்சிகளால், வளர்ச்சியைக் கொண்டு வர முடியும் என்பதற்காகவே இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்தேன். மு.க.ஸ்டாலினும் போட்டியிடுவதற்கு அனுமதித்துள்ளார் என்று கூறியுள்ளார்.