IPL வீரர்கள் சந்திக்க இருக்கும் முக்கியமான 4 பிரச்சனைகள்..! என்னென்ன..?

928

முன்னுரை:-

வைரஸ் தொற்று பரவல் காரணமாக, இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பொதுவாக இந்தியாவில் மட்டுமே ஐ.பி.எல் போட்டிகள் விளையாடி பழக்கப்பட்ட வீரர்கள், இந்த முறை அயல்நாட்டில் விளையாட இருக்கின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகம் பாலைவன தேசமாக இருப்பதால், அந்நாட்டின் சீதோஷ்ன நிலைக்கு ஏற்றவாறு விளையாட வேண்டி உள்ளது. இதனால், இந்த முறை 5 முக்கிய பிரச்சனைகளை ஐ.பி.எல் வீரர்கள் எதிர்கொள்ள இருக்கின்றனர்.

அவற்றை பற்றி தற்போது பார்க்கலாம்..

1. வானிலை:-

காலை நேரங்களில் அதிக வெப்பமும், மாலை நேரம் செல்ல செல்ல குளிரான சூழலும் ஏற்படும். இதனால், வீரர்கள் இரண்டு விதமான சூழலை ஒரே நாளில் சந்திக்க வேண்டியிருக்கும்.

2. நீர்:-

ஐக்கிய அரபு அமீரகம், பாலைவன தேசமாக இருப்பதால், அங்கு அதிகமான வெப்பம் வீசக்கூடும். இதனால், அங்கு பயிற்சியில் ஈடுபடும் வீரர்களுக்கு, மிக அதிகமான நீரிழப்பு ஏற்படும். இந்த சூழலை வீரர்கள் சமாளிப்பது கடினம். குறிப்பாக வடஇந்தியாவை சேர்ந்த வீரர்களுக்கும், ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த வீரர்களுக்கும் இந்த விஷயம் பெரிய தலைவலியாக இருக்கும்.

3. ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளுதல்:-

வீரர்கள் பந்து வீசும் போது, விக்கொட்டுகளை எடுத்துவிட்டால், அவர்களை தூக்கி உற்சாகப்படுத்துதல் எப்போதும் நடக்கக்கூடியது. ஆனால், இந்த முறை வைரஸ் தொற்று காரணமாக அப்படி செய்ய முடியாது. இதன்காரணமாக, வீரர்கள் விக்கெட் எடுத்தாளும், சேர்வடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

4. ரசிகர்கள்:-

என்ன தான், பவர் ஃபுல் ஷாட்கள் அடித்தாளும், ஹாட்ரிக் விக்கெட் எடுத்தாளும், கைதட்ட ரசிகர்கள் இல்லாததால், அவர்களுக்கு அது உற்சாகத்தை ஏற்படுத்தாது.

முடிவுரை:-

இந்த 4 பிரச்சனைகளையும், ஐ.பி.எல் வீரர்கள் இந்த முறை சந்திக்க இருக்கிறார்கள். இதனை மீறி, எந்தெந்த வீரர்கள் அசத்த இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.