“காணாமல் போன நடிகர்கள் பா.ஜ.க-வில் உள்ளனர்” – திருமாவளவன்

2222

தமிழகத்தில் காணாமல் போன நடிகர்கள் அனைவரும், பா.ஜ.க-வில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருப்பதாகவும், கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் பா.ஜ.க கலவரத்தை தூண்ட, அதிமுக அரசு, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிப்பதாகவும், திருமாவளவன் விமர்சித்தார்.

Advertisement