நீட்டும் வேண்டாம், நெக்ஸ்டும் வேண்டாம் – தொல்.திருமாவளவன்

628

மத்திய அரசு கொண்டு வரும் நீட் தேர்வையும், நெக்ஸ்டு தேர்வையும் தமிழகத்தில் ஒருப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று நாடாளுமன்ற உறுப்பினரும். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை காவு கொடுக்க தமிழக அரசு தயாராக விட்டது என்றும், நீட் மசோதா நிராகரிக்கப்பட்டத்தில் மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து நாடகமாடுகின்றன எனவும் குற்றம்சாட்டினார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக கூறிய திருமாவளவன், சூரியாவின் கருத்தை பொருத்துக் கொள்ள முடியாமல், பாஜகவினர் தான் அரசியலாக்குகின்றனர் என்று தெரிவித்தார்.

Advertisement