பொள்ளாச்சி சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழு! திருமா!!

561

தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாளவளவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். பொள்ளாச்சியில் நடைபெற்ற அவலம் தமிழகத்துக்கே தலைக்குனிவு.

இச்சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்தப்படும் என அறிவித்த தமிழக அரசு, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்துள்ளது. தமிழக அரசின் இந்நடவடிக்கை சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

பொள்ளாச்சி சம்பவம் குறித்து நீதிமன்றக் கண்காணிப்பு அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தியும், பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்”

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement